தனி மனிதனை ஓரிடத்தில் தனியே இருந்து கொண்டே கூட்டத்தில் பேசுவது போல பேச வைக்கிறது..
நேருக்கு நேர் பேச முடியாததையும் நெட்வொர்க்கில் பேச வைக்கிறது...
இன்றைய கால கட்டத்தில் மக்களின் தனிமையை போக்க இது உதவுகிறது...
இதனால், பக்கத்தில் இருப்பவனை விட பதில் போடும் நெட்வொர்க் நண்பர் வட்டம் பெரிது ஆகிறது...
தன் நெட்வொர்க்கில் இருப்பவர்களையும், தன் நெட்வொர்க்கில் சேர்பவர்களைப் பற்றிய அக்கரையையும் வளர்க்கிறது...
அதோடு நின்று விடாமல்,
அருகாமையிலோ, தொலைவிலோ இருக்கும்
இணைய வசதியோ, அதற்கு நேரமில்லாமலோ உழைக்கும் நண்பர் அல்லது உறவுகளின் தொடர்பை
நாம்
விட்டு விடக் கூடாது..
_____
சொஷைட்டி பற்றியோ, சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி பற்றியோ, நான் தெரிந்து கொள்ள விரும்பிய செய்திகள் பற்றியோ... நான் பேசுகிறேன், என் சோஷியல் நெட்வொர்க்கில்.இதையெல்லாம் பற்றி பேச பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை என்பது எனது தனிப்பட்ட அனுபவம்.....(சமூகம் சமூக பொறுப்புணர்வு இதை விட இவற்றின் ஆங்கில வடிவம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா..)
இங்கே என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். அது ஏன் நல்ல விசயங்களாய் இருக்க கூடாது..(பொழுபோக்காய் மாறிப் போன தொலைக்காட்சி, வானொலி எல்லாம் காசுக்காக நிகழ்ச்சி பண்ணும் போது எது நல்ல விசயம், எது தேவையான விசயம் எது தேவையில்லாத விசயம்..? நாம தான் தேடி தேடி பார்க்க வேண்டும்.. அவற்றுக்கு ஆதரவும் அளிக்க வேண்டும்...)
வாரந்திர, மாதாந்திர மற்றும் தினசரி பத்திரிக்கை எல்லாமே அது போல தான்.. எதைப் போட்டால், அதிகமா பத்திரிக்கை விற்கும் என்று தான் கணக்கு போட்டு செய்திகள் போடுகிறார்கள்.... உண்மையான சமூக நலனில் செய்திகள் போடுவதில்லை.... ஊடகம் மீதான அதீத சோர்வே அதன் மீதான வெறுப்பை எனக்கு தருகிறது...
மனிதன் சமூகப் பிராணி-என்று படித்த நாள் முதல், சமூகத்தில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது கவனிக்கத் துவங்கினேன்..? சமூகத்தை சீரழித்தாவது நம்ம சம்பாதிக்கனும் என்பது தானே, ஊடகங்களின் குறிக்கோளாய் இருக்கிறது..
இந்த சமூக தளங்களில், பொதுவாய் பேச வேண்டிய விவாதிக்கப் பட வேண்டிய ஆயிரம் அத்தியாவசியமான விசயங்கள் இருக்கிறது.. தொலைக்காட்சியிடம் சிக்கிக் கொண்டது போல், சிக்கிக் கொள்ளாமல், பயன்படுத்த நமக்கு தெரிய வேண்டும்...
No comments:
Post a Comment