மரங்களற்ற ஊர், வற்றும் நீர் ஊற்று, ஈரமற்ற மண்:
கொழுத்தும் வெயிலில் நிழல் வேண்டும்...
வளமாய் கிடந்த வயல்வெளி, வறண்ட பாலையாய்...
பொங்கி வந்த நதியெல்லாம், புத்தகக் கதையாய்...
இயற்கையை சீண்டி விட்டு,
இயல்பு தனை மாற்றி விட்டோம்..
மண்ணில் சேர வேண்டிய,
வருடம் தவறாமல், ஆனால்
பருவம் தப்பி பெய்யும்
மழை...
மண்ணில் சேர முடியாத,
மக்காத குப்பைகளும், அதிலே
மக்கிப் போன அரசியலும்
ஆபத்தான பிழை...
மரங்களும், மண்ணில் ஈரமும்...!
மனிதமும், மனசாட்சியும் ...!
ஒப்புதல் சரியே...
பின்னது குறைவதால்,
முன்னது அழிவை நோக்கி...