Monday, June 20, 2011

வெட்டி வேலை

சமைக்கும் போது, சில வேளைகளில் எதிர் பாராமல் சில உணவுப் பொருள்கள் மீதமாகி அல்லது அளவு அதிகமாக ஆகி விடும். அவ்வாறு மிகையான/மீதமான பொருளகளைக் கொண்டு சுவையான பதார்த்தங்கள் செய்ய முடியும் என கண்டு கொண்டேன். இந்த கண்டுபிடிப்புகள் தேவைப்படாத வேலை தான். இதில் முயற்சிகள் வீணாகப் போகவும் வாய்ப்புண்டு(புதிய பதார்த்தம்) உதாரணத்துக்கு, கொண்டைக்கடலையை கிரேவி செய்ய ஊற வைத்தாயிற்று. வேக வைத்த பின் அதிகமாய் ஊற வைத்து விட்டது தெரிந்தது..(ஊறியதும் தெரிந்தது தான்)...மீதம் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து 3 நாள் கழித்து தான் அதே கிரேவி செய்ய வேண்டும். அதற்கு பதில் வேறு ரெசிபி இன்றே செய்தால் என்ன? அது தான் உடனடி வெட்டி வேலை. அந்த நேரத்தில் தேவைப்படாத வேலை, ஆனால் புது ரெசிபி திடீரென கிடைக்கும், பொருளும் வீணாவது இல்லை..
___________________________
உடைத்த கோதுமை உளுந்து வடை

தேவையான பொருட்கள்
வேக வைத்த உடைத்த கோதுமை - 1 கப்(குக்கரில் 2 விசில் வைக்கவும்)
உளுந்து - 2 கப்
ப மிளகாய் - 3
அரிந்த கொத்தமல்லி தழை - 1/4 கப்
அரிந்த வெங்காயம் - 1/4 கப்
துருவிய கேரட், மெல்லிசாய் நறுக்கிய முட்டை கோஸ் - 1/2 கப்
இஞ்சி, மெல்லிதாய் அரிந்தது - சிறிது
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி(உடைத்துக் கொள்ளவும்)
உப்பு

செய்முறை
1. உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து மிகச் சிறிய அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து, காய்ந்த எண்ணையில் வடை போல தட்டி சுட்டு எடுக்கவும்
-------------------------------------------------------------
உடைத்த கோதுமை பாயசம்

தேவையான பொருட்கள்
உடைத்த கோதுமை 1 கப்
தேங்காய் பால் - 1/4 கப்
முந்திரி திராட்சை
வெல்லப்பாகு அல்லது சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய்
ஜவ்வரிசி - 1/4 கப்

செய்முறை
1. ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்
2. உடைத்த கோதுமையை குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும்
3. அதே குக்கரில், மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும். சிம்மில் வைத்து வேக விடவும்.. தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கிளறவும்.
------------------------------------------------------------
கொண்டைக்கடலை அல்வா

தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
முந்திரி திராட்சை - தேவையான அளவு
கடலை மாவு - 1/4 கப்
நெய், ஆலீவ் ஆயில்
மசித்த வாழைப்பழம் - 1
தூளாக்கிய ஏலக்காய்
சர்க்கரை - 2 கப்

செய்முறை
1. ஊற வைத்த கொண்டைகடலையை, சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். நன்றாக பிசையவும்.
2. நான் ஸ்டிக் கடாயில் கலவையை கொட்டி சிம்மில் வைத்து கிளறவும். இடையிடையே நெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்க்கவும்...
3. நன்றாக வெந்து நிறம் மாறும். அல்வா பதம் வந்த பின் இறக்கவும்.

Tuesday, June 7, 2011

பழங்கள் பறிக்க செல்வோம்

செர்ரி,

ஆப்ரிகாட், ஸ்ட்ராபெர்ரி இதற்கெல்லாம் இதே தான் தமிழிலும் பெயர்கள். பழங்கள் பழுக்கும் பருவத்தில் பொது மக்கள் தாங்களே வேண்டும் அளவுக்கு பழங்களை பறித்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர் தோட்டங்களின் உரிமையாளர்கள். கலிபோர்னியாவில் ப்ரென்ட்வுட் என்ற இடத்தில் நிறைய பண்ணைகள் உள்ளன. பள்ளி விடுமுறை விட்டபின் குழந்தைகளுக்கு fruit picking என்றால் ஒரே சந்தோஷம் தான்.
விவரங்கள் இதில்...
http://www.harvest4you.com/

நிழல் தேடி ...

நிழல் தரும் மரம், தான் நிழலில் நிற்பதில்லை.

கிடைக்கும் நீரையும் நிலத்தையும் பயன்படுத்தவும்,
நிலத்தை மேலும் பண்படுத்தவும் தாவரங்களுக்கு யாரும் கற்றுத் தர வேண்டியது இல்லை...

நம்மால் நேரிடையாக இயற்கையை பாதுகாக்க முடியாவிட்டாலும், இது போன்ற செய்திகளை படிக்கலாம்...We already have some awareness about Re-Use, ReCycle and more...!We can follow or atleat not comment whoever follows...!

-முடிந்தவரை இயற்கையைப் பற்றியும், வனங்கள் பாதுகாப்பு, விவசாயம், மரம் வளர்ப்பு, வனம் சார்ந்த விலங்குகள் பற்றிய தகவல்...இன்னும் இது போன்ற செய்திகளை தேடி படிக்கவேண்டும்... என்ற ஆவலில், படிக்க கிடைத்தவற்றை இங்கே பதிகிறேன், திரும்பி படிப்பதற்காக..!
***************************************************************************