Wednesday, January 4, 2012

படித்ததிலிருந்து...1

நிறைய கருத்துக்கள்... இப்படி எல்லாம் நாம் ஏன் சிந்திக்கவில்லை என எண்ண வைக்கும் பதிவுகள் வினவில் உள்ளன.. நான் படித்த சிலவற்றில், ஒன்று இங்கே...

http://www.vinavu.com/2012/01/02/evolution/

- கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.-பதிவிலிருந்து...

இங்கே சொல்லப் பட்டு இருக்கும் விவாதப் பொருளை தாண்டி... எத்துனை உண்மைகள்...
விஞ்ஞானிகளின் மன தைரியம், உண்மை தெரிந்து கொண்ட மகிழ்ச்சி, ஏற்க தெரியாத பெரிய மனிதர்கள், தம்மை சுற்றி ஏதும் தெரியாத சாமானிய மனிதர்கள்...கட்டுரை நன்கு விவரிக்கிறது...

No comments:

Post a Comment