Sunday, May 27, 2018

புதிய முயற்சி - கோலங்கள், டிசைன்கள், வரைகலை

https://kanmanivaraikalai.wordpress.com/kids-activity-books/

தங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறோம்


Friday, March 21, 2014

I wondered when I saw this picture, can a drought and dry hill turn into complete green? should be done in fairy tales...rite. But, Feeling happy to read the words below......

"Slowly over the years not only Timbaktu but also the surrounding hills have greened themselves while insects, birds and animals have reappeared"

from

http://timbaktu.org/ there are so much wonderful persons doing "Amazing works" need to be updated/shared , to be followed.

the significance of the words above, "insects, birds and animals have reappeared" MEAN a lot. It is a real CHANGE.


https://www.facebook.com/photo.php?fbid=10203624087545985&set=gm.10151922671797377&type=1&theater




 

Monday, February 20, 2012

ஸ்டூடண்ட்ஸ்....!


இது ஒரு மந்திர வார்த்தை...!
மாணவப் பருவத்தில் வானம் தான் எல்லை...
படிப்பதை தாண்டி அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கும் பருவம்.
வீட்டைத் தாண்டி வெளி உலகம் எப்படி என்பதை
வீட்டுக்குள் ஊடகத்தால் அறிந்து கொள்கிறான்...

வெளி உலகில் பட்டு அறிந்து கொள்ள வேண்டியதை தொலைக்காட்சிகள் முன்னமே புட்டு புட்டு வைத்து விடுகின்றன...
இதிலே, முதலில் மாணவன் தெரிந்து கொள்வது, "ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது...."
பள்ளியில் என்னவெல்லாம் சொல்லி தருகிறார்களோ எல்லாமே, மதிப்பெண் எடுக்க மட்டுமே..
மதிப்பெண் எடுத்தா நல்ல கல்லூரி, நல்ல வேலை என்பது மூளையில் ஏற்றி மட்டும் தான் விடப் படுகிறது...
படிக்க விடுவதற்கான எந்த சூழலையும் வீடு, கொடுப்பதில்லை... சமூக ஊடகங்கள் கொடுப்பதில்லை..
இதிலே, ஏன் ஊடங்கள் மேல் பழி போடனும் என்று நினைக்கலாம்.. அது தானே ? என் கேள்வியும்...
எத்தனை குப்பையை தான் பாத்தாலும் நாம அதற்கு அடிமையாய் கிடக்கிறோம்...

ஊடகம் தன் இறையாண்மைதனை மறந்து, கடமையை நாடு சுதந்திரம் பெற்ற உடன் முடித்துக் கொண்டது...
அதன் பின் எல்லாம் நம்ம மூளையை அழுக்காக்கி, காசு பார்க்கும் தொழில்களாக அவை மாறி விட்டன...
நிறைய இது பற்றி எழுத வேண்டும்....
செய்யறத எல்லாம் செய்து விட்டு, நஞ்சை கலந்து கொடுத்து விட்டு, பிஞ்சிலே பழுத்தது என மாணவர்களை பற்றி சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது...
----பஸ் டே கொண்டாடும் மாணவர்கள்...னு படம் போட்டு செய்தி...பார்த்தேன். அதற்கு நிறைய கண்டனங்களும் ல் பார்த்தேன்....
இந்த செய்தியை சொல்லும் ஊடங்கள் முதலில் ஊடக தர்மத்தை கடை பிடிக்கின்றனவா?
அப்படி சொல்லி இருந்தால் எம்மாணவர்கள் இப்படி செய்திருப்பார்களா?
காமராஜ், அண்ணா அல்லது ஏதேனும் உண்மை அரசியல் வாதிகள் பற்றியோ, சுற்றுப் புர சூழல் குறித்து அதன் ஆய்வாளர்கள், விவசாயம் அதன் அழிவு பற்றிய அலசல், விவசாய வல்லுநர்கள், புவி வெப்பமடைதல், பாலாறில் (எல்லா தமிழகத்து ஆறுகள்) மண்ணை இல்லாததால், அதைச் சார்ந்த மக்களின் வாழ்வு அழிந்தது, விவசாயி தற்கொலை, இன்னும் எத்தனை மக்கள் சார்ந்த பிரச்சினை இருக்கின்றன? அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து இந்த ஊடகங்கள் செயலாற்றி இருத்தால், இம்மாணவர்கள் எல்லோரும் கூடங்குளத்தில் அல்லவா போராட்டத்தில் இருந்து இருப்பார்கள்....
வயித்துப் பொழப்புக்காக தன் உயிரை பணயம் வைத்து கடலுக்கு மீன் பிடிக்க போனா குண்டு எங்கேருந்து வரும்னு தெரியாது..
உழைக்க நினைக்கறவனுக்கு
உயிருக்கு உத்திரவாதமில்லை...
ஊடகங்கள் உண்மையாய் நடந்து கொண்டு இருந்தால், இம்மாணவர்கள் சும்மா விட்டு இருப்பார்களா? என்னைக்கோ போராடி இருப்பார்கள்....
பண்ரதெல்லாம் பண்ணிட்டு தான் ரொம்ப ஒழுங்கு மாதிரி செய்தி போடலாமா?

தலைப்பு செய்தியில் எது வர வேண்டும்?
எத்தனை பத்திரிக்கை அதிகமா விற்கும்?
எந்த நிகழ்ச்சி ரேட்டிங்கில் அதிகம் வரும்...
காசு எத காட்டுனா வரும் என்று இயங்கும் ஊடங்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறது?
பொழுபோக்கு தான் வாழ்க்கை ... ஜாலியா இருக்கனும்... அது தான் வாழ்க்கை...டைம்பாஸ்- என்னவேனா செய்வோம் பொழுது போக்கிற்காக-அவனுக்கு எத்தனை பிரசர்? நமக்கு என்ன தெரியும்? "பெத்தவங்க அரும்பாடு பட்டு உழைக்கிறாங்க.. நாம நல்லா படிக்கனும்டா" ... அவனை எங்கே நினைக்க விடுறாங்க..

நல்ல விசயம் பேசுனா, அது ரம்பம், அறுவை...மொக்கை.. என வெளிப்படையா நாமலே பேசும் போது, நமது கண்ணாடி பிம்பங்களான மாணவன் மட்டும் எப்படி இருப்பான்? அவன் சக்திக்கு முடிஞ்ச எஞ்சாய்மென்ட்.....!

Tuesday, January 17, 2012

மறந்து போனது....

மகனின் பள்ளி வகுப்பிற்காக அவனோடு சேர்ந்து வரைந்தது..
படம் வரைதல்-மிகவும் பிடித்த விசயம், வெகு நாட்கள் எப்படி மறந்து போனேன்...?

விடைகளற்ற கேள்விகள்..?



விடைகளற்ற கேள்விகள்..?

ஒவ்வொரு மனிதனும் கேட்கவேண்டியவை...

கண்டதெல்லாம், நாகரிகம் இல்லாததெல்லாம் பேசறவங்க மத்தியில், நீங்கள் எல்லாம் பேசனும் நாசர் சார்... அதிகமா பேசனும் சார்

http://www.youtube.com/watch?v=W1Rp9nUB4zM&feature=share